2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

பூநகரியில் நெற்செய்கை பாதிப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசத்தில் மழை வெள்ளம் காரணமாக 500 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்திருப்பதாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலச்சந்திரன் நிர்மலாதேவி தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், பயிர் செய்கைகளை அழித்துள்ளது.

இந்நிலையில் பூநகரிப் பிரதேசத்தில் உள்ள சின்னப்பல்லவராயன் கட்டுக்குளத்தின் கீழ் 750 ஏக்கர் காலபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இதில் 300 ஏக்கர் வரையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பூநகரிப் பிரதேசத்தில் ஏனைய பகுதிகளில் 11,850 ஏக்கர் வரையில் நெற்செய்கையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதில் 200 ஏக்கர் வரையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X