2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

புனித பிரதேசங்களாக மாறும் மாவீரர் துயிலும் இல்லங்கள்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். என். நிபோஜன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைப் புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம், நேற்றையதினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், மாவீரர் துயிலும் இல்லங்களைப் பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கிராமிய அபிவிருத்தி தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இக் கோரிக்கையை விவசாய சங்கத்தினர் வழிமொழிந்த நிலையில் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .