Niroshini / 2016 மார்ச் 28 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள் இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளன.
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூன்று ஆணையாளர்கள் உள்ளடங்களாக தற்போது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது, மன்னார் மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகளுக்கு கலந்து கொண்டு சாட்சியம் வழங்காதவர்களுக்கே சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 257 பேரூக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 hours ago
5 hours ago
8 hours ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago
14 Nov 2025