2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

யானை வெடிகளுக்கும் அஞ்சாத யானைகளால் தொல்லை

Gavitha   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காயின் ஐயன்கன்குளம், பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான் ஆகிய கிராமங்களில் யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகள் அமைத்துத் தருமாறு இக்கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐயன்கன்குளத்தில் 210 குடும்பங்களும் பழையமுறிகண்டியில் 40 குடும்பங்களும், புத்துவெட்டுவானில் 80 குடும்பங்களும், யானைகளின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளதோடு, விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக புத்துவெட்டுவானிலிருந்து ஐயன்கன்குளம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும், மருத்துவமனைக்குச் செல்லும் மக்களும், அடிக்கடி யானைத் தாக்குதலுக்கு உள்ளாவதுடன், துரத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

யானை வெடிகளுக்குக் கூட அஞ்சாத யானைகளை எதிர்கொள்வதற்கு, மின்சார வேலியை அமைத்துத் தருமாறு, இக்கிராமங்களின் மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .