2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற மூவருக்கு விளக்க மறியல்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு பின்புரமுள்ள மலசலக் கூடத்தினுள் கடந்த ஞாயிறன்று மாலை 15  வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 03 நபர்களையும் 14 தினங்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தின் பின் பகுதியில் உள்ள பெண்கள் மலசல கூடத்தில் மாலை 3.30 மணியளவில் மேற்படி சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த போது குறித்த இளைஞர் மூவரையும் மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.

பின் கடந்த 30ஆம் திகதி மன்னார் நீதிவான் திருமதி கே.ஜீவராணி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் கீதவன் மூவரையும் எதிர்வரும் 14 தினங்களுக்கு மரியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .