2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அஞ்சல் விளையாட்டு விழாவிற்காக ஒலிம்பிக் தீபப் பவனி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள நாடாளவிய ரீதியிலான தபால் திணைக்கள அலுவலர்களுக்கிடையிலான விளையாட்டு விழாவிற்கு மாகாண மட்டத்திலிருந்து ஒலிம்பிக் தீபங்கள் எடுத்து செல்லப்படுகின்றது.

இந்த வரிசையில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் தீபம் ஏந்திய வீரர்கள் வவுனியாவிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் மதவாச்சி நோக்கி புறப்பட்டனர்.

வடபிராந்திய பிரதி அஞ்சல்மா அதிபதி வி.குமரகுரு, வவுனியா மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் கே.புஸ்பநாதன், வவுனியா பிரதம தபால் அதிபர் எம்.இராமச்சந்திரன் மற்றும் தபால் திணைக்கள அதிகாரிகள் இவர்களை வழி அனுப்பிவைத்தனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ,கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட வீரர்கள் இந்த ஒலிம்பிக் தீபத்தினை ஏந்தி சென்றனர்.

மாகாண மட்ட விளையாட்டு விழா எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் அநுராதபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .