2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் அரச, தனியார் போக்குவரத்து சேவை மோதல் குறித்து கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்க உறுப்பினர்களுக்கும் அரச போக்குவரத்துச் சபை உறுப்பினர்களுக்கும் இடையில் போக்குவரத்து சேவையில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக இன்று வியாழக்கிழமை காலை தல்லாடி படைத்தளத்தில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போது அரச, தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் உறுப்பினர்கள், மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்கள் மீது அரச போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவோர் தாக்குதல் மேற்கொள்வதாக கூறி தனியார் போக்குவரத்துச் சங்கம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், இந்த இரு சங்கங்களுக்கிடையிலும் இராணுவம் விசேட கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்தது. எதிர்வரும் 14ஆம் திகதி அரச அதிபர் தலைமையில் இவ்விடயம் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .