2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி கிருஷ்ணன் கோயிலில் நித்திய பூசைகள் இடம்பெறுவதற்கு அனுமதி

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (லோகமூர்த்தி)

கிளிநொச்சி கிருஷ்ணன் கோயிலில் நித்திய பூசைகள் இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கு இன்று பூசைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னோடியாக ஆலய பரிபாலன சபையினரிடம் படையினரால் குறித்த ஆலயம் கடந்த புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த இந்த ஆலயத்தில் நித்திய பூசை வழிபாடுகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அதற்காக குறித்த ஆலயத்தை விடுவிக்குமாறும் ஆலய பரிபாலன சபையினர் கோரியிருந்தனர்.

இந்நிலையில், இதனை ஏற்றுக்கொண்ட படையினர் இதற்கான அனுமதியை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .