2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

தெற்கிலிருந்து வடக்கிற்கான பரிமாற்றல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

தேசிய சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் தேசிய சிறுவர் சபையின் "தெற்கிலிருந்து வடக்கிற்கான பரிமாற்றல் நிகழ்வு" நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது.

இத்திட்டத்தின் கீழ் தெற்கிலிருந்து 120 சிங்கள மாணவர்கள் மன்னாரிற்கு வருகை தந்துள்ளனர்.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர். மன்னாருக்கு வந்த இவர்கள் மக்களுடன் உறவாடி கலாசார விழுமியங்களையும் கற்றுக் கொண்டனர். இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இம்மாணவர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன்போது, பெண்கள் விவகார சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கலஸ்பிள்ளை மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு நாளை சனிக்கிழமை நண்பகலுடன் நிறைவடைகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .