2025 ஜூலை 07, திங்கட்கிழமை

போரால் பாதிக்கப்பட்ட வன்னி பாடசாலைகள் ஒரு வருடத்தில் மீளமைக்கப்படும்

Super User   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

ஒரு வருட காலத்தில் போரால் பாதிக்கப்பட்ட வன்னிப் பாடசாலைகள் அனைத்தும் மீளமைக்கப்பட்டுவிடும் என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
 
கிளிநொச்சி மாவட்டத்தில் 81 பாடசாலைகள் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன. இவற்றில்  24 ஆயிரத்தி 794 மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை அரம்பித்துள்ள  நிலையில் ஆயிரத்தி 357 ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்த சூழல் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அந்த மாணவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வன்னிப் பகுதிகளில் யுத்தம் காரணமாகப் பாடசாலைகள் அழிவடைந்துள்ளபோதும் மாணவர்களின் கல்வியை நோக்காகக் கொண்டு கற்றல் செயற்பாடுகள் போதிய வசதிகள் எவையும் அற்ற நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. – என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .