2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களின் உளநலனை மேம்படுத்தும் திட்டங்கள் பகிர்ந்தளிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர்களின் உளநலனை மேம்படுத்தும் நோக்குடன் வகுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் தொண்டு நிறுவனங்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவற்றை தொண்டு நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் சர்வதேச, உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச மட்ட சிறுவர் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறுவர்களின் உளநலனை மேம்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதுடன் வெடிபொருள் பாதிப்பில் இருந்தும் சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .