2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பாலியல் துஷ்பிரயோகப் புகார் : மன்னார் சிறுமியர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

பாலியல் துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சனின் உத்தரவுக்கமைய மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள  சிறுமியர் இல்லமொன்று இன்று சீல் வைத்து மூடப்பட்டது.

மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிக்கு கிடைத்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாட்டினைத் தொடர்ந்து மன்னார் நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேற்படி சிறுமியர் இல்லத்தை மூடுமாறு மன்னர் மாவட்ட நீதிபதி ஏ.யுட்சன் இன்று திங்கட்கிழமை மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அதையடுத்து  குறித்த சிறுமியர் இல்லம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

மேற்படி இல்லத்தில் 18 வயதிற்குற்பட்ட பல சிறுமியர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். விடுமுறை நாட்களில் மேற்படி இல்லத்தின் நிர்வாகி, சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியில் உள்ள தனது வீட்டு வேளைக்காக அழைத்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே மேற்படி துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 15 வயதுடைய சிறுமி ஒருவர் குறித்து, மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினுடாக மன்னார் மாவட்ட நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தியமையை அடுத்து, மேலும் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி குறித்த இரண்டு சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் குறித்த சிறுமியர் இல்லத்தில் உள்ள சிறுமியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி குறித்த இல்லத்தினை மூடுமாறும் நீதீபதி உத்தரவிட்டார். இதற்கமைவாக  சிறுமியர் இல்லம் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபரான  சிறுமியர் இல்ல நிர்வாகி தலைமறைவாகியுள்ள நிலையில், மன்னார் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.
 


  Comments - 0

 • Fahim Tuesday, 19 October 2010 02:33 AM

  வேலியே பயிரை மேய்கிறதா? வெட்கக் கேடு.

  Reply : 0       0

  xlntgson Wednesday, 20 October 2010 08:59 PM

  இம்மாதிரியான செய்திகளில் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு இடமானது. சிறுவர்களை பெளத்ததுறவிகளாக ஆக்கவேண்டாமென்று ஓர்இயக்கம் கேட்டுக்கொள்கிறது. ஏனென்றால் அவர்கள் சில தவறான செயல்களுக்கு இளம் வயதிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனராம். அப்படி என்றால் பெளத்ததுறவியாவது எப்படி, என்றால் 18வயது வரை பொறுக்கவேண்டுமாம். இதே விதி ஆஷ்ரமங்களுக்கும் செமினரிகளுக்கும் மதரசாக்களுக்கும் பொருந்துமா தெரியவில்லை. தவறான வழியென்றால் வயது வித்தியாசம் எதற்கு? இதெல்லாம் பேசக்கூடாத விடயங்களை பேசவேண்டும் என்று செய்யும் வழியா?

  Reply : 0       0

  A.Robert Wednesday, 20 October 2010 11:08 PM

  ஏன் நம்பகத் தன்மை சந்தேகத்திற்கிடமானது என்கிறீர்கள் Xlntson? பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டையடுத்து மன்னாரில் சிறுவர் இல்லமொன்று மூடப்பட்டுள்ளது. உண்மை. தேவையானால் நேரில் வந்து பார்க்கலாம்.

  Reply : 0       0

  xlntgson Friday, 22 October 2010 09:37 PM

  நன்றி ரொபேர்ட். இந்த மாதிரி செய்திகளினால் நான் அலுத்துப் போய்விட்டேன். இதில் ஏதேனும் உண்மையை நீங்கள் கண்டால் நான் எனது கருத்தை மீண்டும் படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இப்படியான செய்திகள் மக்களை எவ்வாறான செயன்முறைக்கு இட்டுச்செல்லும்? 18வயதில் இதெல்லாம் நடந்தால் குற்றம் இல்லையா? வயதெல்லையை 18ஆக அதிகரித்தால் அனாதைகள் பிரச்சினை இல்லாமல் போய்விடுமா? அதிகாரிகள் இரகசிய கேமராக்களை பொருத்திப் பார்ப்பார்களா, அநேகமான இடங்களில் துஷ்பிரயோகம் என்பது தேங்காய் திருகியது தண்ணீர் இறைத்தது சமைத்தது போன்ற செயல்கள்.

  Reply : 0       0

  xlntgson Saturday, 23 October 2010 09:11 PM

  மேலும் இப்படியான முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் இவ்வாறான சிறுவர் நல காப்பகங்களை மூடிவிடுவதும் அந்த பிள்ளைகளை அவர்களது கலாச்சாரத்துக்கு ஒவ்வாத ஒரு சிறுவர் இல்லத்துக்கு அனுப்புவதும்ஏன்?
  பிள்ளைகளை தவறான வழியில் செல்ல காரணமானவர்களை நீக்கி விட்டு தொடர்ந்து நடத்த இயலாதா, வேறு ஆட்கள் இல்லாமலா போய்விட்டது
  இது மத மாச்சரியம் போன்ற காரணமாகவே தெரிகிறது
  வீடுகளில் இவ்வாறான செயல்கள் நடந்தால் வீடுகளை மூடிவிடமுடியுமா?
  பேடித்தனத்தையும் ஒருபாற் சேர்க்கைகளையும் தூண்டும் மேலைநாட்டு சதிகளுக்கு இங்கேயும் ஆட்கள் உண்டு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .