2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

வட மாகாணசபைக்கான சட்ட ஆலோசகர்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வட மாகாணசபையின்  நிபுணத்துவ சட்ட ஆலோசகராக இளைப்பாறிய யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனம் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை மற்றும் அதற்கு உட்பட்ட உள்ளூராட்சி சபைகள் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களுக்குரிய ஆலோசனை மாகாண சபையின் புதிய விதிகளுக்கான ஆலோசனையை வழங்கும் பணியை நிபுணத்துவ சட்ட ஆலோசகர் வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .