2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மடு பிரதேச செயலகப் பிரிவில் நீதியமைச்சின் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான நீதியமைச்சின் செயற்றிட்டத்தின் ஊடாக நடத்தப்படும்  நடமாடும் சேவை மடு பிரதேச செயலகப் பிரிவில் இன்று  நடைபெற்றதாக நீதியமைச்சின் ஆலோசகர் எம்.திருநாவுக்கரசு இன்று தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மடு பிரதேச செயலகப் பிரிவில் பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில், யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 750க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் ஆகியவற்றின்  பிரதிகளை பெற்றுக்கொள்வதற்காக 800 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக 400இற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அத்துடன், 100இற்கும்  அதிகமான காலங்கடந்த பிறப்புப் பதிவுகள் நடைபெற்று இன்றே வழங்கப்பட்டதாகவும் முதியோர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக இன்று விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாகவே முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

யுத்தத்தின்போது தவறவிட்ட  காணி ஆவணங்களை வழங்குவதற்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.


இது தவிர, யுத்தகாலத்தின்போது இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்று மீண்டும் இலங்கை திரும்பியவர்களின் இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கான புதிய பிறப்புக்கான பதிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.  

இடம்பெயர்ந்தோரின் காணியில் அத்துமீறி குடியிருப்போருக்கு மாற்றுக் குடியிருப்புக்களை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.    

இதேவேளை,  மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இலுப்பக்கடவை கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் 1200இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தமது பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்இ திருமணச் சான்றிதழ்கள் ஆகியவற்றின்  பிரதிகளையும் தேசிய அடையாள அட்டைகளையும்  பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்தனர்.


இந்த நடமாடும் சேவையில் தன்னுடன் இணைந்து மன்னார் அரசாங்க அதிபர் ஏ.நிக்கலஸ்பிள்ளை, பதிவாளர் நாயகம் ஈ.ஏ.குணசேகர, மேலதிக பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர்இ நீதியமைச்சின் ஆலோசகர்  ஜனகரணதுங்க மற்றும் ஓய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் திருமதி அபயவிக்கிரம, பிரதி பதிவாளர் நாயகம் திருமதி ராஜரட்னம்  ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .