2021 ஜூலை 31, சனிக்கிழமை

கிளிநொச்சி வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி இன்றி நெருக்கடி

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இதுவரை சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்படாமையால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்து சுமூகமான சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வைத்தியசாலை இயங்க ஆரம்பித்து ஒரு வருடத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்படவில்லை. இதனால் மரண விசாரணைகளை உரிய வகையில் மேற்கொள்ள முடியாது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .