Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தின் மாமுனை கடல் பகுதிகளில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, முப்பத்து மூன்று (33) கிலோகிராமை விட அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலகேணி கடற்படை நிலையத்தால் மாமுனை கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதிகளில் மிதந்து கொண்டிருந்த ஒரு (01) சந்தேகத்திற்கிடமான பையானது பரிசோதிக்கப்பட்டது, மேலும் பையில் பொதிச்செய்யப்பட்டிருந்த முப்பத்து மூன்று (33) கிலோகிராமை விட அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.
கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ஏழு (07) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறதுடன்,மேலும் கடற்படையின் நடவடிக்கைகளின் போது கரைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.
24 minute ago
31 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
52 minute ago