Menaka Mookandi / 2010 நவம்பர் 10 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு வட மாகாண ஆளுநர் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்கலன்களை கையளித்தார். இந்நிகழ்வு கிளிநொச்சி, புள்ளியம்பொக்கனையிலுள்ள அரிசி ஆலை களஞ்சியத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழிலாண்மை அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தா மற்றும் நாடாளுமன்ற குழுவின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
விடுதலைப் புலிகளற் இயக்கத்தினரால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் சுமார் ஆறரை கோடி ரூபா பெறுமதியான இந்த கொள்கலன்கள் வட மாகாணத்திலுள்ள விவசாய அமைப்புக்களுக்கும் கூட்டுறவுச் சங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
வட மாகாணத்திலுள்ள பெருமளவிலான களஞ்சியங்கள் யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ளன. தற்போது பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை களஞ்சியப்படுத்தும் வகையில் இந்த கொள்கலன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வட மாகாணத்தை சேர்ந்த விவசாயிகளும் மக்களும் பயனடைவர் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.



3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago