2021 ஜூலை 29, வியாழக்கிழமை

பதவிப்பிரமாண நிகழ்வு

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எஸ்.எம்.மும்தாஜ், எஸ்.ஜெனி)

நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் ஒரு நகர சபை மற்றும் ஒன்பது பிரதேச சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக தெரிவுசெய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 32 உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சிலாபத்துறை அரசினர் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

25 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற முசலி பிரதேச சபைக்கான தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டப்ளிவ்.எம்.எஹியான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுத்தீன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம்.ஹிஸ்புல்லாஹ், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிரி, கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். சுபைர், முன்னாள் அமைச்சர் எம். எஸ். அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0

  • Sperera Sunday, 10 April 2011 12:17 AM

    Yarukku anna lapem,,,,,,,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .