2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மாங்குளம் மகாவித்தியாலயம் மீண்டும் சொந்த இடத்தில்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மாங்குளம் மகாவித்தியாலயம் மீண்டும் சொந்த இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

யுத்த காலத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இவ்வித்தியாலயத்தை இந்த மாதம் முதலாம் கல்வித் திணைக்களத்திடம் இராணுவத்தினர் ஒப்படைத்திருந்தனர். இதனையடுத்து, இப்பாடசாலை மீண்டும் சொந்த இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.

பொதுமக்கள் இப்பகுதியில் மீள்குடியேறிய நிலையில் மாணவர்கள் தங்களுடைய கற்றல் செயற்பாடுகளை இப்பாடசாலையில் மேற்கொள்ளக்கூடியதாகவுள்ளது.

இதேவேளை, அப்பகுதியிலிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு வீதிப் போக்குவரத்துக்கள் சீராக காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .