2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை

வவுனியா நகரசபைத் தலைவர் தெரிவில் தொடர்ந்து இழுபறி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா நகரசபைத் தலைவர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவரை தலைவராக நியமிக்க முயற்சிகள் நடைபெற்றபோதிலும், அதற்கு நகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு காட்டினார்;.

நேற்று தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தலைமையில் வவுனியா நகர மண்டபத்தில் நடைபெற்றபோதிலும,; முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி  நடைபெறவுள்ளதால் அதில் வவுனியா நகரசபைக்குரிய தலைவர்  யார் என்பது முடிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்படுமென மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .