Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்களில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 294 பேர் இன்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் இன்று தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணவாளர் பட்டமுறிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இன்றையதினம் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் மணவாளர் பட்டமுறிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் படிப்படியாக மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
50 minute ago
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
5 hours ago
7 hours ago