2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அக்கராயனின் பிரதான வீதியினைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயனின் பிரதான வீதியினைப் புனரமைத்துத் தருமாறு இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பலப்பெருமாள் சந்தியிலிருந்து ஸ்கந்தபுரம் வரையான இரண்டு கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படாமலே காணப்படுகின்றது.

அக்கராயன் மகா வித்தியாலயம், ஆரம்ப வித்தியாலயம் மற்றும்  ஸ்கந்தபுரம் பாடசாலை மாணவர்கள், மழை காலங்களில் குன்றும் குழியுமான வீதியினால் பயணித்தே பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

மீள்குடியேற்றத் தொடக்கத்தில் இருந்து அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இவ்வீதி புனரமைக்கப்பட வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

கிளிநொச்சி நகரிலிருந்து புதுமுறிப்புக்குளம் வரையான வீதி புனரமைக்கப்பட்டுள்ள போதிலும் ஊற்றுப்புலம், கோணாவில், ஸ்கந்தபுரம், அக்கராயன், ஆரோக்கியபுரம், ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம், ஜெயபுரம், பல்லவராயன்கட்டு வரையான வீதி புனரமைக்கப்படாமலே காணப்படுகின்றது.

இந்நிலையில் இவ்வீதியில் அமைந்துள்ள பாடசாலைகள் மருத்துவமனைகளை இலக்குவைத்து வீதிகளை புனரமைத்துத் தரும்படி இப்பகுதி பொது அமைப்புகளும் மக்களும் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .