2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அக்கராயன் மேம்பால பணிகள் ​ஆரம்பிக்கப்படவில்லை

George   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன் மேம்பாலத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்படமை காரணமாக அக்கராயன் பிரதேச மக்கள், வெள்ள அபாயத்தை எதிர்நோக்கும் நிலைமை தொடர்கின்றது.

“திருமுறிகண்டி - அக்கராயன் வீதியில் அக்கராயன்குளத்தின் வான்வெள்ளம், வீதியின் குறுக்காக பாய்கின்ற பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்” என்பது இப்பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இடர்முகாமைத்துவக் கூட்டங்களிலும் இப்பாலம் தொடர்பாக ஆராயப்பட்டன. இப்பாலம் அமைப்பதற்கு 70 மில்லியன் ரூபாய் தேவையென வடமாகாண போக்குவரத்து அமைச்சரால் தெரிவிக்கப்பட்டு, வடமாகாண முதலமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டுமுள்ளனர்.

இருந்தும், இதுவரை பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. மழை காலம் தொடங்கவுள்ள நிலையில், இப்பாலம் வழியான போக்குவரத்து வருடாந்தம் துண்டிக்கப்படுவது போன்று இந்த வருடமும் துண்டிக்கப்படக்கூடிய  நிலைமை காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .