2025 ஜூலை 02, புதன்கிழமை

அக்கராயன் - யாழ். பஸ் சேவையை மீள ஆரம்பிக்க கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கடந்த 2010ஆம் ஆண்டு காலத்தில் நடத்தப்பட்டு நிறுத்தப்பட்ட அக்கராயனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அக்கராயனிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

கிளிநொச்சி, அக்கராயனிலிருந்து பூநகரி வழியாக யாழ்ப்பாணம் வரை இந்த பஸ் சேவையானது காலை வேளையில் நடத்தப்பட்டது. எனினும், வீதிகள் சேதமடைந்து பயணிக்க முடியாத நிலைக்கு வந்தமையினால் இச்சேவை இடைநிறுத்தப்பட்டது.

தற்போது, பூநகரி, முட்கொம்பன் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. முட்கொம்பனிலிருந்து அக்கராயன் வரையான 5 கிலோமீற்றர் வீதி மாத்திரமே புனரமைக்கப்படவில்லை. எனவே, இடைநிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .