2025 மே 21, புதன்கிழமை

‘அடக்குமுறையைத் திணிக்காதவரே தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

அடக்குமுறையை திணிக்காத ஓர் ஆட்சியை நிலை நிறுத்தி, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டுமென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், நாட்டின் பாதுகாப்பு என்ற வகையில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அனைத்தும், எதிர்காலத்தில் தமிழர் விரோத செயற்பாடுகளாகவே அமையுமெனவும் ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் இலங்கை இன்னும் நகரவில்லையெனவும் தெரிவித்தார்.

எனவே, அனைத்து இன, மத மக்களுக்கும் சமத்துவத்தை வழங்கி, இன்னோர் அடக்குமுறையை திணிக்காத ஓர் ஆட்சியை நிலை நிறுத்தி, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஒருவரே, ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .