Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஜனவரி 27 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதியான வீர மங்கை இந்துகாதேவிக்கு, “அடங்காமை” திரைப்படக் குழு, சன்மானம் வழங்கியுள்ளது.
இந்தச் சாதனை யுவதிக்கு, திரைக் குழுமம் சார்பாக (வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள்) ஒரு இலட்சம் ரூபாய் (100,000) கொடுத்து கெளரவப்படுத்தியிருக்கின்றனர்.
தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இந்துகாதேவி, தனது திறமைமீது கொண்ட நம்பிக்கையை உரமாக்கி, இன்று இச்சாதனையை படைத்து நாட்டுக்கும் முல்லைத்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என படக்குழுவினர் வாழ்த்தியுள்ளனர்.
அதுமட்டுமன்றி, இந்துகாதேவியின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்கான தொடர் முயற்சிகளுக்கும் தங்கள் உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் திரையரங்குகளில் நாளை (28) வெளியாகும் தென்னிந்திய முழுநீளத் திரைப்படம் “அடங்காமை”. இத்திரைப்படத்தின் (வோர்ஸ் பிக்சர்ஸ்) தயாரிப்பாளர்கள் பொன்புலேந்திரன், மைக்கேல் ஜான்சன் மற்றும் கதாநாயகன் சரோன் ஆகியோர் இலங்கை - யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago