Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2017 ஜூலை 17 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பச்சிலைப்பள்ளி, கரந்தாய் கிராமத்தில், தெங்குப் பயிர்ச்செய்கை சபையினரால் அடாத்தாக வெளியேற்றப்பட்ட 27 குடும்பங்களையும், குறித்த காணியிலேயேயே மீள்குடியேற்றுவதென்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
இன்று (17) நடைபெற்ற பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே, மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டின் பின்னர், குறித்த காணியில் 27 குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில், தெங்குப் பயிர்ச் சபையினரால், அக்குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, குறித்த காணியில் வேலி அடைக்கப்பட்டு தென்னைகளும் நடப்பட்டன.
அக்காணியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், அக்குடும்பங்களிடம் காணப்படுவதன் காரணமாக, அக்குடும்பங்களைஉடனடியாக குறித்த காணியில் குடியேற்றுவதெனவும் இது தொடர்பான முடிவுகள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் அறிக்கை இடுவதெனவும், கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .