Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியமான உப நகரங்களில் ஒன்றாக காணப்படுகின்ற புதுக்குடியிருப்பு பகுதியில் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்படாமையால் தேவைகருதி வரும் பொதுமக்கள் வர்த்தகர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய உபநகரங்களில் ஒன்றாக காணப்படுகின்ற புதுக்குடியிருப்பு நகரில், அதிகளவான மக்கள் வாழ்ந்து வருவதுடன், பல்வேறு தேவை கருதி அதிகளவான மக்கள் கூடுகின்ற ஓர் இடமாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கான பஸ் நிலையம் உரிய இடத்தில் உரியமுறையில் அமைக்கப்படாத நிலையில காணப்படுகின்றது.
அதாவது, புதுக்குடியிருப்பு பகுதிக்கான பஸ் நிலையத்துக்கு உரிய இடம் தெரிவு செய்யப்படாமல் பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளபோதும், பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு நகரில் இருந்து ஒட்டுசுட்டான் வவுனியா செல்லும் பயணிகள் ஒட்டுசுட்டான் வீதியிலும் முல்லைத்;தீவு செல்லும் பயணிகள் முல்லைத்தீவு வீதியிலும் அதேபோல் கிளிநொச்சி செல்லும் பயணிகள் பரந்தன் வீதியிலும் தரித்து நிற்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அத்துடன், குறுந்தூர போக்குவரத்துச்சேவைகள் இன்மை மற்றும் மேலதக அடிப்படை வசதிகள் இன்மை எனப் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக முக்கய உபநகரமாக காணப்படும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின்தேவைகளை நிறைவு செய்து தருமாறு, பொதுமக்கள் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 minute ago
15 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
33 minute ago
49 minute ago