2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அடிப்படை வசதிகள் இன்மையால் இடம்பெயர்வு

Editorial   / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்துக்கு உட்பட்ட கல்லாறு கிராமத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையால், இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளன. 

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தின்போது, பாதிக்கப்பட்ட 150 வரையான குடும்பங்களுக்கும் அதன் பின்னர் கண்டாவளைப் பிரதேசத்தில் காணிகள் இன்றி வாழ்ந்த 100 வரையான குடும்பங்களுக்கும், காணிகள் வழங்கப்பட்டு நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன. 

இவ்வாறு 250க்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு, மக்கள் குடியேற்றப்பட்டபோதும், இப்பகுதிக்கான உட்கட்டமைப்பு வசதிகள், எவையும் செய்யப்படாமையாலும், தொழில் வாய்ப்புகள் இன்மையாலும், இங்குள்ள குடும்பங்கள் வசதிவாய்ப்புகளைத் தேடி, வேறு இடங்களுக்குச் செல்கின்றன. 

குறிப்பாக, 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் குடியமர்த்தப்பட்ட 100 குடும்பங்களில், 23 வரையான குடும்பங்களும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் 75 வரையான குடும்பங்களும் மாத்திரமே, தற்போது வாழந்து வருகின்றன. 

சுமார் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள், ஆட்கள் இல்லாத வீடுகளாகவே காணப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X