Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
அண்மைய ஆட்சி மாற்றங்கள் நம்பிக்கையீனங்களைக் கோடிட்டு காட்டுகின்றது என, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக போச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தமிழினத்தின் அரசியல் உரிமைகளுக்கு வலுச்சேர்த்த ஆயுதபோராட்டம் இழக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் தமிழர் தரப்பு அரசியல் வடிவத்தின் அதி உச்ச செயலாற்றுகை பெரும் நம்பிக்கையீனங்களையே அண்மைய ஆட்சிமாற்ற முடிவுகள் கோடிட்டுகாட்டுகின்றன.
ஆகவே எதிர்கால தாயக அரசியல் பரப்பில் புதிய முனைப்புகள் புதிய சிந்தனைகள் புதிய முகங்கள் தொடர்பில் எமது மக்கள் சிந்திக்க தலைப்பட்டுள்ளனர் என்றார்.
குறிப்பாக பிராந்திய அரசியலுறவு தொடர்பில் இந்தியா தனது நண்பர்கள் யார் என்பதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறோம் எனவும் அவர் கூறினார்.
தமது, புலம்பெயர் உறவுகளே இனிவரும் காலங்களில் வாழ்வாதார உதவிகளோடு நின்றுவிடாமல் நீங்கள் கற்றுணர்ந்த உங்களின் தொழில் புலமையினையும் பெருமளவிலான முதலீடுகளையும் வட-கிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகுமெனவும் பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள எமது இனம் மீட்சிபெற வழிவகுக்கும். அதேபோன்று செய்யப்படுகின்ற முதலீடுகளுக்கான பாதுகாப்பை தமது அரசியல் தலைமைகள் உருவாக்க வேண்டுமெனவும் கூறினார்.
தாயக அரசியல் நிலமைகளைக் கருத்திற்கொண்டும் தாயக மக்களின் அவலங்களை கருத்திற்கொண்டும், புலம்பெயர் அமைப்புகளும் சாத்தியப்பாடான தீர்வுகளை எட்டுவதற்கும் தாயக அரசியற் பரப்பை செய்யப்பட்ட எல்லாத் தியாகங்களின் பேரிலும் ஒற்றை இலக்குகளை நோக்கி பயணிக்கும் ஓர் அரசியல் செல் நெறிப்போக்கை கட்டமைக்க தமது பயனுறுதி மிக்க காத்திரமான பங்களிப்பை நல்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago