2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்

Freelancer   / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்

கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் வினியோகம் இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சியில் நேற்று  பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. 

எரிபொருளை பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பெற்றோலுக்கு பதிலாக சூப்பர் பெற்றோலை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.

இவ்விடயம் தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரிடம் வினவியபோது, 

இருப்பில் இருந்த பெற்றோல் தீர்ந்து போயுள்ளது. வருகைதரும் மக்களுக்குகு வழங்க முடியவில்லை.  சூப்பர் பெற்றோலையே வழங்குகின்றோம். அதுவும் குறைவாகவே உள்ளது.

இருப்பில் உள்ள மிக குறைந்த அளவிலான பெற்றோல் மற்றும் டீசலை அத்தியாவசிய தேவையின் நிமித்தம் வருவோருக்கு உறுதிப்படுத்திய பின் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்குவதாக தெரிவித்தார்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X