Niroshini / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக, முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து கவனயீர்ப்பு பேரணியாகச் சென்ற மீனவர்கள், கடற்கரை வீதி வழியாக மாவட்டச் செயலகம் வரை சென்றனர்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக தகரப் பந்தல் அமைத்து, கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட போது, அங்குவந்த முல்லைத்தீவுப் பொலிஸார், பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடை விதித்தனர்.
இதையடுத்து, பந்தல் அமைப்பதற்கு கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்டு, மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள் பந்தல் அமைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர், சம்மேளன தலைவர் ஆகியோரால் மாவட்டச் செயலாளர் க.விமலநாதனிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், இந்தப் போராட்டத்துக்கு, முல்லைத்தீவு மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், முல்லைத்தீவு பிரதேச வர்த்தக சங்கம், மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், கரைதுறைப்பற்று பலநோங்கு கூட்டுறவு சங்கம், பனை - தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், முல்லைத்தீவு சிகை அலங்கரிப்பாளர் சங்கம், கரைதுறைப்பற்று கிராமிய அபிவிருத்தி சங்கம் ஆகியன ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago