Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறமாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் முல்லைத்தீவு, கொக்கிளாய் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கொக்கிளாய் மீனவர்கள் சங்கம் முறைப்பாடு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரிடம் கடிதம் மூலம் அவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
கொக்குளாய் கடற்பரப்பிலும் களப்புப் பகுதியிலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணமாக, நிரந்தரமாக குடியேறி கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் தொழிலை இழந்துள்ளனர்.
கொக்குளாய், நாயாறு, மாத்தளன் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களும் பயன்படுத்தப்படுவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் பிரச்சினையை உடன் தீர்க்குமாறு அக்கடிதத்தில் அவர்கள் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago