Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மற்றும் தடைசெய்யப்பட்ட முறையிலான மீன்பிடி நடவடிக்கையால், இன்னும் ஓரிரு வருடங்களில் வடமராட்சி வடக்கு மீனவர்களுக்கு தொழில் இல்லாமல் போகும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் ரி.அருள்தாஸ், நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடமராட்சிக் கடலில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதுடன், தடைசெய்யப்பட்ட தங்கூசி மற்றும் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தியும் டைனமைட் வெடி வைத்தும் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், கடலட்டை மற்றும் சங்கு பிடித்தலிலும் அனுமதியின்றி இவர்கள் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக குறித்த கடல் பகுதியில் மீன்வளம் குறைகின்றது' என்றார்.
'தற்போது இந்திய மீனவர்களின் ஊடுருவல் சற்றுத் தணிந்துள்ள நிலையில், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இவர்களின் செயற்பாட்டால் இன்னும் ஓரிரு வருடங்களில் வடமராட்சி வடக்கின் மீன்வளம் அழிவடையும். இதனை அடுத்து, அப்பகுதி மீனவர்கள், மீன்பிடித்தொழிலை கைவிடவேண்டிய நிலையேற்படும்.
கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின், இவர்களின் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளையும் உடனடியாகத் தடைசெய்ய வேண்டும். இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago