Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்கள வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த தேக்கு மரங்களை அகற்றுவதற்குரிய அனுமதிகள் பெறப்பட்டு, மரக்கூட்டுத்தாபனத்தின் ஊடாக அகற்றியுள்ளதாக, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் காணப்பட்ட இரண்டு பாரிய தேக்கு மரங்கள் நேற்று முன்தினம் (06) வெட்டியகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வித் திணைக்கள வளாகத்தில் உள்ளக வீதி ஒன்றை அமைப்பதற்கு ஏற்ற வகையில் குறித்த இரண்டு மரங்களையும் அகற்றுவதற்கு உரிய அனுமதிகள் பெறப்பட்டு, மரக்கூட்டுத்தாபனத்தின் ஊடாக அகற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் பயன்தரு மரங்களை மீள்நடுகை செய்ய உள்ளதாகவும், வலய கல்விப் பணிப்பாளர் கூறினார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago