Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்ரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்
அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதே, எங்கள் நல்லாட்சியின் குறிக்கோளாகுமென, நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.
கிளிநொச்சியில், நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டிடதொகுதிக்கான அடிக்கல்லை இன்று (03) நாட்டி வைத்ததன் பின்னர், அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின், பூரண ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் மாங்குளம், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பானம் ஆகிய நீதிமன்றங்களுக்கான கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்த அவர், அந்த கட்டுமானப் பணிகளில் ஐம்பது சதவீதம் நிறைவடைந்துள்ளன எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .