Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஜூலை 23 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கென கனியவள திணைக்களத்தால் மாதாந்தம் 100 கியுப் மணலுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுகிறது. இது தமது தேவைக்கு போதாமலிருப்பதாகவும் இதனை அதிகரிக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
இந்த விடயம் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில், 'முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலேயே அதிகளவில் இயற்கை வளங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. குறிப்பாக கருங்கல் அகழ்வு, மணல் அகழ்வு, கிரவல் அகழ்வு, தேக்குமரங்கள் அறுத்து விற்பனை செய்யப்படுதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றன
இருப்பினும் இச்செயற்பாடுகள் வனவளத் திணைக்களம் உள்ளிட்ட அனைவரது கண்காணிப்பின் கீழும் சிறப்பாக தங்குதடையின்றி இடம்பெறுகிறது.
ஆனால் கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டு தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து தமது வீட்டுத்தேவைக்காக அனுமதியுடன் செய்கின்ற மணல் அகழ்வுகளுக்கு அதிகாரிகள் தடைவிதிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க வெளிமாவட்டங்களிலிருந்து பலர் வருகைதந்து மணல் அகழ்வு உள்ளிட்ட பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை கூட அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்
இவ்வாறு வெளியிடங்களிலிருந்து வருகைதந்துள்ளவர்களுக்கு 500 கியுப்புக்கு மேற்ப்பட்ட மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குபவர்கள், பாதிக்கப்படும் மக்கள் பிரதேச செயலகத்தில் பெறும் இந்த அனுமதிப்பத்திரத்தை மட்டுப்படுத்துவது ஏன் என்பதே மக்களின் ஆதங்கமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago