Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 10 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில், அனுமதி பெறாமல் தென்பகுதி கம்பனி ஒன்றினால் ஹோட்டல் அமைக்கப்பட்டு வரும் விடயம் தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உட்பட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு திங்கட்கிழமை விஜயம் செய்தனர்.
குறித்த பகுதியில் உள்ள காணியில் தென்பகுதி கம்பனி ஒன்று சுமார் 20 ஏக்கரில் கட்டடம் அமைத்து வருகின்றது. குறித்த பகுதியில், ஹோட்டல் அமைப்பதற்காக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அனுமதி கிடைக்காத போதும் கட்டட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பூநகரி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலளர்களின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
குறித்த பகுதியில் ஹோட்டல் அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டதாகவும், ஹோட்டல் அமைப்பதற்கான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாமையால் அனுமதி வழங்க முடியாத நிலை காணப்பட்டதாக பிரதேச சபை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி பெறப்படாமல் கட்டடம் அமைக்கப்பட்டு வரும் விடயம் தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலையடுத்து, ஹோட்டல் அமைக்கப்படுவதை நிறுத்துமாறு வலியுறுத்தி கடந்த பெப்ரவரி மாதம் கடிதம் அனுப்பப்பட்டதாகவும், எனினும் குறித்த கட்டட நிர்மாண பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பூநகரி பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார்.
-
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago