2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி வேலைகள் நிறைவு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் பனிக்கன்குளம் கிராம அலுவலகர் பிரிவில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையத்தினுடைய வேலைகள் நிறைவடைந்துள்ளன.

கிராமத்துக்கு 10 இலட்சம் ரூபா நிதியின் கீழ் இடம்பெற்று வந்த சனசமூக நிலையத்தினுடைய வேலைகளே நிறைவடைந்துள்ளன. இத்தோடு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலுள்ள 27 கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்று வந்த 100 நாட்கள் வேலைத்திட்ட வேலைகள் பதினைந்து கிராம அலுவலகர் பிரிவுகளில் நிறைவடைந்துள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தொரிவிக்கின்றன.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் புளியங்குளம், கருவேலன்கண்டல், தட்டயர்மலை, கற்சிலைமடு, பண்டாரவன்னி, கனகரத்தினபுரம், முத்துவிநாயகபுரம், தண்டுவான், பழம்பாசி, மணவாளன்பட்டமுறிப்பு, ஒலுமடு, தச்சடம்பன், மாங்குளம், இந்துபுரம் மற்றும் பனிக்கன்குளம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்றுவந்த அந்தந்த கிராம மக்களின் தேவைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட வேலைகளே இவ்வாறு நிறைவு செய்யப்பட்டள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .