2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

அம்பாள்புரம் கிராம மக்கள் அவதி

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, அம்பாள்புரம் கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் இன்மை வீதிகள் புனரமைப்பின்மை குடிநீர் வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக, அப்பகுதி மக்கள தெரிவித்துள்ளனர்.

அம்பாள்புரம் கிராமத்தில் தற்போது 325க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், மேற்படி கிராமத்துக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமை, போக்குவரத்து வசதியின்மை மற்றும் குடிநீர் வசதியின்மை என பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து  வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யுத்தம் காரணமாக இக்கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழகத்தில் தங்கியிருந்து தாயகம் திரும்பிய நிலையில், குறித்த கிpராமத்தில் மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் தாங்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .