2025 மே 03, சனிக்கிழமை

‘அம்பியூலன்ஸ் சேவை வழங்கவும்’

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து அம்பியூலன்ஸ் மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் மகப்பேற்றுக்குரிய பெண்கள், மகப்பேற்றுக்குப் பின்னர் மீளவும் அம்பியூலன்ஸில் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுவதில்லை.

இதன் காரணமாக, மகப்பேற்றின் பின்னர் தமது சொந்தச் செலவில் பஸ்களிலோ அல்லது பிற வாகனங்களிலோ மாங்குளத்தை நோக்கி தமது சிசுக்களுடன் பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் வீடுகளுக்குத் திரும்புகின்ற அவலம் தாய்மார்களுக்கு காணப்படுகின்றது.  

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு மகப்பேற்றுக்கு அனுமதிக்கப்படும் பெண்கள், கூடுதலாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகின்றனர்.

எனினும், மகப்பேற்றை நிறைவு செய்த பெண்கள், தமது சிசுக்களுடன் மாங்குளத்திற்கு திரும்புவதில் பண நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

மாங்குளத்தில் இருந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு செல்கின்ற பெண்கள், மகப்பேற்றை பின்னர் மீண்டும் தமது சிசுக்களுடன் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனன ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெறுகின்ற கூட்டங்களில் மாதர் சங்கங்கள் கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.  

எனவே, முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் மாதர் சங்கங்கள் பல வலியுறுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X