2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘அரசாங்கத்துக்கு ஆதரவளித்தால் சோதனைச்சாவடிகள் அதிகரிக்கும்’

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 04:08 - 1     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதனூடாக, தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களும் சோதனைச்சாவடிகளுமே அதிகரிக்குமெனத் தெரிவித்துள்ள குழுக்களின் பிரதி தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே துணை என்றார்.

“இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக, வட மாகாணம் இன்று காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்தே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 1

  • S.P.Jesuthasan Saturday, 15 February 2020 04:45 PM

    தமிழ் மக்கள் மத்தியில் கட்சிகள் அதிகரித்தால் பரவாயில்லை ?சோதனைச் சாவடிகள் அதிகரிப்பது தான் ஒரு கேடா ? ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .