Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 21 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியன் ரூபாயை ஒதுக்கிவிட்டதாக, அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது என, வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில், இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், எந்தவொரு சமூக நலன் சார்ந்து அல்லது, வறுமையை போக்கக்கூடிய அளவிலான வரவு-செலவுத் திட்டமாக இது அமைந்திருக்கவில்லை எனவும் கடன்பட்டு இந்த நாட்டை கொண்டு நடத்துகின்ற நிலையிலும் இன்று தாயின் கருவில் இருக்கின்ற பிள்ளையின் தலையைில்கூட கடன் சுமையை சுமத்தக்கூடிய நிலையில் தான் இந்த அரசாங்கம் போய்கொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்தவொரு தீர்ப்பையும் சொல்லாமல் அல்லது எந்தவொரு விசாரணையையும் ஆக்கபூர்வமாக இதயசுத்தியுடன் முன்னெடுக்காமல், 300 மில்லியன் ரூபாயை இந்த வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளதாக இந்த வரவு - செலவுத் திட்டத்தில் கூறுவதென்பது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கும் எனவும், அவர் கூறினார்.
"சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பூர்வாங்க விசாரணை ஒன்றை சர்வதேச மத்தியஸ்தத்துடன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற பொறுப்புகூறலை கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக கூறி, இந்த அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது. இந்த ஏமாற்றத்துக்கு எங்களுடைய மக்கள ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.
"எனவே, இந்த அரசாங்கம் முதலில் பொறுப்புகூறலை இதயசுத்தியுடன் செய்வதற்கு தயாராக வேண்டும். இந்த தருணத்தில் இந்த நிதி ஓதுக்கீட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago