2025 மே 01, வியாழக்கிழமை

’அரசியலுக்கு இளைஞர்களின் வரவு அதிகரிக்க வேண்டும்’

Niroshini   / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

தமிழ்த் தேசிய அரசியலுக்கு இளைஞர்களின் வரவு அதிகமாக இருக்க வேண்டுமென்று, பச்சிலைபள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி ஜெயந்திநகர் விளையாட்டுக் கழகத்தால், அண்மையில், கிளிநொச்சியில் நடத்ப்பட்ட துடுப்பாட்ட போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய அரசியலுக்கு இளைஞர்களின் வரவு குறைவாக காணப்பதுவதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு வருபவர்கள், தேசிய கொள்கையில் பற்று கொண்டிருப்பதை விட பதவிகளிலேயே பற்றுள்ளவர்களாகவும் தமது அடுத்த கட்ட பதவிகளை பெற துடிப்பவர்களாகவுமே இருக்கிறார்களே ஒழிய, கொள்கைவழி பயணிப்பதை இலக்காக கொண்டிருப்பதில்லை எனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலை மாற்றப்பட வேண்டுமென்றும் இளைஞர்கள் கொள்கைவழி பயணிப்பவர்களாக வளர்க்கபட வேண்டும் எனவும், சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .