2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அரச ஊழியர் வைத்தியசாலையில் திடீர் அனுமதி

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

முல்லைத்தீவைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவர் சுகவீனம் காரணமாக  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை மின்சார சபையின் வவுனியா அலுவலகத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தாராக கடமையாற்றிவரும் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைதீவு உடையார்கட்டு பகுதியை வதிவிடமாகக்கொண்ட இவர், விடுமுறையில் அங்கு சென்றுவிட்டு, கடந்த சனிக்கிழமை வவுனியாவில் உள்ள அவரது அரச விடுதிக்கு திரும்பியுள்ளார்.  

இந்நிலையில் தொடர்ச்சியான வயிறுப்போக்கு, காய்ச்சலால் பீடிக்கப்பட்ட அவர், இன்று (01) அம்பியுலன்ஸ் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு கொரோனா வைரஸ் பீடித்துள்ளதா என்பதை கண்டறிவதற்காக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .