2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

அரச - தனியார் பஸ்களில் மாணவர்கள் புறக்கணிப்பு

George   / 2017 மே 10 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“ஏ-9 வீதியூடாக தினமும் காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் பயணிக்கும் வவுனியா யாழ்ப்பாணம் டிப்போக்களை  சேர்ந்த பஸ்கள்  மற்றும் தனியார் பஸ்கள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லை” என, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களை மறித்து பெரும் சிரமங்களின் மத்தியில் மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்” என்றும் அவர்கள் கூறினர்.

“கிழவன்குளம், பனிக்கன்குளம், கொல்லர்புளியங்குளம் மற்றும் கருப்பட்டமுறிப்பு, ஒலுமடு, வன்னிவிளாங்குளம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த பாடசாலை மாணவர்கள், மாங்குளம் மகா வித்தியாலயத்துக்கே செல்லவேண்டியுள்ளது.

“மாணவர்கள் தினமும் காலை 7.00 மணி முதல் அரச மற்றும் தனியார் பஸ்களை வழிமறித்தாலும் அவை குறித்த மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லை” என, பெற்றோர் கூறுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .