Freelancer / 2022 மார்ச் 08 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மகளிர் தினத்தினை துக்க தினமாக அனுஷ்டித்து, முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று (08) நடத்தினர்.
முல்லைத்தீவு - புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்தபோராட்டம், முல்லைத்தீவு பிரதான சுற்றுவட்டப் பாதைவரை ஊர்வலமாக வருகைதந்து நிறைவடைந்தது.
ஐக்கியநாடுகள்சபையின் 49ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதியினைச் சர்வதேச சமூகம் விரைந்து வழங்கவேண்டுமென கோரினர்.
மேலும், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியும், சர்வதேச மகளிர் தினத்தினை துக்கதினமாக கடைப்பிடித்தும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நிதியைக் கோருகின்ற வகையில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிலான பாதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பயும், கறுப்புக்கொடியினை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இப்போராட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், சமூகமட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



4 hours ago
7 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
13 Nov 2025