Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
தேர்தல்கள் வரும்போது வாக்குக்காக நிறைய பேர் வருவார்கள் தமிழர்களாக இருந்து கொண்டு தமிழ் சமூகத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்தார்களோ இன்று அவர்கள் தமிழ் சமூகத்தைக் காப்பற்றபோவதாக வந்து நிக்கின்றார்கள் என்று, வடமாகாண முன்னாள் அமைச்சர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
விசுவமடு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “அன்று வன்னியில் உள்ள மக்கள் வவுனியாவுக்கு செல்வதற்கு பட்ட துன்பம் உங்களுக்கு தெரியும். ஆமிக்கு பயந்து இல்லை, வவுனியாவில் உள்ள சில ஆயுதக்குழுக்களுக்கு பயந்து திரும்பி போவோம் என்று தெரியாமல் வந்தார்கள். அவர்கள் இன்று தாங்கள்தான் தமிழ்மக்களை தூக்கிவைத்திருக்கும் அவதாரபுருசர்கள் போல் வந்து நிக்கின்றார்கள் அவர்களுக்கு பின்னால் நிற்பவர்கள் 18,20 அகவை பொடியள் நிக்கின்றார்கள்” என்றார்.
“தமிழர்களை அழித்த காணாமல்போக செய்தவர்கள் தமிழர்களிடம் கப்பம் வாங்கினவர்கள் எல்லாம் தான் இன்று மற்றவர்களை குறைசொல்லிக்கொண்டு, தாங்கள் என்ன செய்தது என்று சொல்லாமல் கூட்டமைப்பு என்ன செய்தது என்று சொல்லிக்கொண்டு மக்கள் மத்தியில் வந்து நிக்கின்றார்கள்.
“இந்த ஆட்களுக்கு பின்னால் செல்லும் இளைஞர்களை பார்க்க மனவேதனையாக இருக்கின்றது. தன்னுடைய சமூகம்,தன்னுடைய சகோதரி,தன்னுடைய பெற்றோர்கள் இவர்களால் எவ்வளவு பாதிக்கப்பட்டது என்று தெரியாவர்கள் சில சலுகைகளுக்காக இப்படிப்பட்டவர்களுடன் நிக்கின்றார்கள்”
“இந்த சமூகத்தைப் பட்டு, அறிந்தவர்கள் இளம் சமூகத்துக்கு கடந்து வந்த பாதையை எடுத்து சொல்லவேண்டும். தமிழர்களின் பாரம்பரியங்களை இன்று கைவிட்டுவிட்டோம் இவற்றை மாற்றி அமைக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025