2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘ஆக்கிரமிப்பே பிரச்சினையாக உள்ளது’

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில், அபிவிருத்தி என்பதை விட ஆக்கிரமிப்பு என்பது ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளதென, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நேற்று (16) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அந்ததந்தக் காலப் பகுதிகளில் வெளியிடப்படட சுற்றுநிருபனங்கள், வர்த்தமானிகள் ஊடாகத்தான், இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து நடத்திவருகின்றனவெனவும் குற்றங்சாட்டினார்.

தொல்பொருள் திணைக்களம், வளவள திணைக்களம் ஆகியவற்றை வரவழைத்து, மகாவலி தொடர்பாக தனித்தனியே கூட்டத்தை நடத்தி, முல்லைத்தீவு மாவடடத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பை நிறுத்த பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், தான் மீண்டும் வந்து கூட்டமொன்றை நடத்துவதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .