Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணத்தில், 2013ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்ற வன்னிப் பகுதி ஆசிரியர்களது சேவைக் காலத்தை 2016ஆம் ஆண்டு நியமனம் பெற்றவர்களாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு கணித்துள்ளமையால், ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், ஆசிரியர்களது மூன்று வருட சேவைக் காலம் கருத்திற்கொள்ளப்படாது விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கடந்த 01.07.2013 அன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதாகக் கூறி, ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டது.
இவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளை முடித்த பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இலங்கை ஆசிரியர் சேவையின் தரம்- 3-1(ஆ)க்குள் உள்ளீர்க்கப்பட்டார்கள்.
இவர்கள் ஆசிரியர்களாக, 2013இல் இணைத்துக்கொள்ளப்பட்ட போது இவர்களுக்குரிய ஆசிரியர் சேவையின் தரம்- 3-11 கருத்திற்கொள்ளப்படாது, 2016ஆம் ஆண்டே ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தாம் 2013 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் ஆசிரியர்களாகச் சேவையாற்றிய 3 ஆண்டுகளும் கருத்திற்கொள்ளப்படாது விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஏற்கனவே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தாம் தமது சேவைக் காலம் பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றின்போது பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் குறித்து வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ள போது, ஆசிரியர்களது சேவைக் காலத்தை நியமனம் வழங்கப்பட்ட 2013ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குருகுலராஜா கூறிய நிலையில், தற்போது, புதிய கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை வடமாகாணத்தின் புதிய கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கவனத்திற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago